ஒலிபெயர்ப்பு

20 க்கும் மேற்பட்ட மொழிகளை ஒலிபெயர்ப்பு ஆதரிக்கிறது. ஒலிபெயர்ப்பு என்றால் என்ன மற்றும் அதன் பயன் என்ன என்பதைப் பற்றி அறிய பின்வரும் வீடியோவைப் பார்க்கவும். மேலும் இதை ஆன்லைனிலும் முயற்சிக்கவும்.

ஒலிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் எழுதுவதை மற்றொரு மொழியில் உள்ள ஒலிப்புமுறைக்கு பொருத்தும் முறையாகும். இந்தக் கருவியானது, நீங்கள் தட்டச்சு செய்யும் இலத்தீன் எழுத்துகளை, இலக்கு மொழியில் அதேபோன்ற உச்சரிப்புகளைக் கொண்ட எழுத்துகளுக்கு மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, இந்தி ஒலிப்புமுறையில் "namaste" என்ற ஒலிகளைக் கொண்ட "नमस्ते" ஐப் பெற நீங்கள் "namaste" எனத் தட்டச்சு செய்யலாம். தேர்ந்தெடுக்க ஒலிபெயர்ப்புப் பரிந்துரைகளின் பட்டியல் உங்களுக்கு காண்பிக்கப்படலாம். ஒலிபெயர்ப்பானது மொழிபெயர்ப்புடன் வேறுபட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்: மாற்றமானது உச்சரிப்பைச் சார்ந்து இருக்கும், அர்த்தம் சார்ந்து இருக்காது.

ஒலிபெயர்ப்பு ஓரளவு பொருந்தும் ஒலிப்புமுறை மேப்பிங்கை ஆதரிக்கிறது. நீங்கள் ஒலிஉச்சரிப்பைச் சரி என கருதுவதை இலத்தீன் எழுத்துகளில் தட்டச்சு செய்தால்போதும், ஒலிபெயர்ப்பானது இதனுடன் பொருந்துகின்ற சிறந்த பரிந்துரைகளுடன் பொருத்தும். எடுத்துக்காட்டாக, "namaste" மற்றும் "nemaste" ஆகிய இரண்டும் "नमस्ते" என்ற பரிந்துரையாக மாற்றப்படும்.

ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்துவதற்கு முதலில் உள்ளீட்டு கருவியை இயக்க வேண்டும். தேடல், Gmail, Google இயக்ககம், Youtube, மொழியாக்கம், Chrome மற்றும் Chrome OS ஆகியவற்றில் உள்ளீட்டு கருவியை இயக்குவதற்குப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ஒலிபெயர்ப்பானது, ஐப் போன்று மொழியிலிருக்கும் எழுத்தால் குறிப்பிடப்படுகிறது. நடப்பு ஒலிபெயர்ப்பை இயக்கு/முடக்கு என்பதற்கு இடையில் மாற ஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது வேறொரு உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்க இதற்கு அடுத்துள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்யவும். ஒலிபெயர்ப்பு இயக்கப்படும்போது, பொத்தான் ஆனது அடர் சாம்பல் நிறமாக மாறும்.

ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தும்போது, வார்த்தையை ஒலிப்பு முறையில் லத்தீன் எழுத்துகளில் தட்டச்சு செய்யவும். தட்டச்சு செய்யும்போதே, ஒலிப்புமுறை எழுத்துடன் பொருந்தும் வார்த்தை பரிந்துரைகளின் பட்டியலைக் காண்பீர்கள். பின்வரும் செயல்களைச் செய்து பட்டியலிலிருந்து வார்த்தையைத் தேர்வுசெய்யலாம்:

  • முதல் பரிந்துரையைத் தேர்ந்தெடுக்க SPACE அல்லது ENTER ஐ அழுத்தவும்,
  • வார்த்தையில் கிளிக் செய்யவும்,
  • வார்த்தைக்கு அடுத்துள்ள எண்ணை உள்ளிடவும்,
  • பக்கத்தில் உள்ள பரிந்துரைகளின் பட்டியலை UP/DOWN அம்புக்குறிகள் மூலம் வழிசெலுத்தவும். PAGEUP/PAGEDOWN விசைகள் மூலம் பக்கங்களைத் திருப்பலாம். தனிப்படுத்திய வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க SPACE அல்லது ENTER ஐ அழுத்தவும்