Google உள்ளீட்டு கருவி Chrome நீட்டிப்பு

Google உள்ளீட்டு கருவி Chrome நீட்டிப்பு, Chrome இல் எந்த இணையப் பக்கங்களிலும் உள்ளீட்டு கருவியைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கிறது. உள்ளீட்டு கருவி Chrome நீட்டிப்பைப் பயன்படுத்த, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. Google உள்ளீட்டு கருவியை நிறுவவும்
  2. நீட்டிப்பு ஐகான் ஐக் கிளிக் செய்து “நீட்டிப்பு விருப்பங்களைத்” தேர்ந்தெடுக்கவும்
  3. “நீட்டிப்பு விருப்பங்கள்” பக்கத்தில், இடதுபக்கத்திலிருந்து வலதுபக்கமாக உங்களுக்கு வேண்டிய உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உள்ளீட்டு கருவியைச் சேர்க்க இடதுபக்கத்தில் இருமுறை கிளிக் செய்யவும். தேர்வை அகற்ற வலதுபக்கத்தில் இருமுறை கிளிக் செய்யவும்.
  5. உள்ளீட்டு கருவியை வலதுபக்கத்தில் உள்ள க் கிளிக் செய்து, மேல் அம்புக்குறி மற்றும் கீழ் அம்புக்குறி ஐகான்களைக் கிளிக் செய்வதன் மூலம் தேர்ந்தெடுத்த உள்ளீட்டு கருவியை வரிசைப்படுத்தவும்.

உள்ளீட்டு கருவியைப் பயன்படுத்த, நீட்டிப்பு ஐகானைக் கிளிக் செய்யவும். பின்னர் கீழ்-தோன்றுதல் மெனுவில், விருப்பமான உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்கவும். உள்ளீட்டு கருவி இயக்கப்பட்டவுடன், நீட்டிப்பு பொத்தானானது போன்று வண்ணமயமான ஐகானாக மாறும். உள்ளீட்டு கருவி முடக்கப்படும்போது, பொத்தான் சாம்பல் நிறமாக மாறும். “முடக்கு” என்பதைக் கிளிக் செய்வது, உள்ளீட்டு கருவியின் நிலையை மாற்றும். தேர்ந்தெடுத்த உள்ளீட்டு கருவிகளில் கிளிக் செய்து அவற்றை இயக்கலாம்/முடக்கலாம்.

உள்ளீட்டு கருவியை இயக்கிவிட்டீர்கள், இப்போது இணையப் பக்கத்தைத் திறக்கவும், உள்ளீட்டுப் பெட்டியில் சுட்டியை நகர்த்தவும், பின்னர் தட்டச்சு செய்யத் தொடங்கவும். இது வேலைசெய்யவில்லை எனில், ஐக் கிளிக் செய்வதன் மூலம் இணையப் பக்கத்தைப் புதுப்பிக்கவும்.

தனிப்பட்ட உள்ளீட்டு கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான கட்டுரைகள்: