கையெழுத்து

மவுஸ் அல்லது தொடு பலகையைப் பயன்படுத்தி சொற்களை நேரடியாக எழுதுவதற்கு கையெழுத்து உள்ளீடானது உங்களை அனுமதிக்கிறது. 50 க்கும் மேற்பட்ட மொழிகளை கையெழுத்து ஆதரிக்கிறது.

கையெழுத்து உள்ளீட்டைப் பயன்படுத்துவதற்கு, முதலில் உள்ளீட்டு கருவியை இயக்க வேண்டும். தேடல், Gmail, Google இயக்ககம், Youtube, மொழியாக்கம், Chrome மற்றும் Chrome OS ஆகியவற்றில் உள்ளீட்டு கருவியை இயக்குவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும். சில மொழிகளுக்கு, மேலே கொடுக்கப்பட்ட சில தயாரிப்புகளின் கையெழுத்து உள்ளீடு கிடைக்காமல் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

Google உள்ளீட்டு கருவி Chrome நீட்டிப்பில் கையெழுத்து உள்ளீட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவதற்கு, இந்தப் பயிற்சி வீடியோவைப் பார்க்கவும்.

கையெழுத்து உள்ளீடு, பென்சில் ஆகக் குறிக்கப்பட்டிருக்கும்.கையெழுத்து உள்ளீட்டைப் பயன்படுத்தும்போது, உங்கள் தொடு பலகை/மவுஸை, கையெழுத்துப் பேனலுக்கு நகர்த்தவும். எழுத்துகளை வரைய தொடு பலகை/மவுஸைத் தொடர்ந்து அழுத்திப் பிடிக்கவும். உங்கள் கையெழுத்துடன் பொருந்தும் பரிந்துரை எழுத்துகள் காண்பிக்கப்படும். எழுத்தில் கிளிக் செய்வதன் மூலம் பரிந்துரையைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது முதல் பரிந்துரையைத் தேர்ந்தெடுக்க ENTER அல்லது SPACE விசையை அழுத்தவும்.