Google உள்ளீட்டு கருவி Chrome OS நீட்டிப்பு

Google உள்ளீட்டு கருவி Chrome OS நீட்டிப்பு, Chrome OS இல் உங்களுக்கு விருப்பமான மொழியில் தட்டச்சு செய்ய உங்களை அனுமதிக்கிறது.

இந்த Chrome OS நீட்டிப்புக்கும் Google உள்ளீட்டு கருவி Chrome நீட்டிப்புக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்:

அம்சம் Chrome நீட்டிப்பு Chrome OS நீட்டிப்பு
ஆதரிக்கும் இயங்குதளங்கள் எல்லா கணினியில் இருக்கும் Chrome உலாவி (Windows, Mac, Linux) Chrome OS கணினிகள் மட்டும்
முகவரிப் பட்டியில் வேலை செய்யுமா (சர்வபுலம்)? இல்லை ஆம்
ஆஃப்லைனில் வேலை செய்யுமா? இல்லை ஆம்

உள்ளீட்டு கருவியானது Chromebooks மூலம் தொகுக்கப்பட்டது. நீங்கள் Chromebook பதிப்பு 28 அல்லது அதற்கு மேற்பட்டதைப் பயன்படுத்தினால், நீங்கள் தாராளமாக உள்ளீட்டு கருவியைப் பயன்படுத்தலாம். இல்லையெனில், உங்கள் Chromebook ஐ மேம்படுத்தவும். நீங்கள் Chromium OS ஐப் பயன்படுத்தினால், Chrome இணைய அங்காடியிலிருந்து Chrome OS நீட்டிப்பை நிறுவுக.

அமைப்புகள் → மேம்பட்ட அமைப்புகளைக் காட்டு → மொழிகள் என்பதற்குச் செல்லவும். “மொழி மற்றும் உள்ளீட்டு அமைப்புகள்” என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் உள்ளீட்டு கருவியைத்(களை) தேர்ந்தெடுக்கவும். [சொந்த மொழியில் மொழியின் பெயர்] ([Chrome UI மொழியில் மொழியின் பெயர்]) என லேபிளிடப்பட்ட உள்ளீட்டு முறைகள், எ.கா. हिन्दी (ஹிந்தி), உள்ளீட்டு கருவியின் ஒலிபெயர்ப்பு வகையைக் குறிப்பிடும் என்பதை நினைவில்கொள்ளவும். உங்கள் உள்ளீட்டை ஒலிப்பு முறையில் இலக்கு மொழிக்கு ஒலிபெயர்ப்பு கருவி மாற்றும்.

உள்ளமைவிற்குப் பிறகு நீங்கள் விரும்பும் உள்ளீட்டு முறைக்கு மாறவும். நடப்பில் பயன்படுத்தப்படும் உள்ளீட்டு முறையைக் கிளிக் செய்யவும், எ.கா., துவக்கியில் உள்ள “US” (அதாவது உங்கள் திரையின் கீழே வலது பக்கத்தில் உள்ள அறிவிப்பு பட்டி/பேனல்).

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளீட்டு முறைகளின் (நீட்டிப்பின் உள்ளீட்டு கருவியும் அடங்கும்) பட்டியல் காட்டப்படும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுக்கவும். புதிய உள்ளீட்டு கருவியைச் சேர்க்க, "மொழிகள் மற்றும் உள்ளீட்டு... ஐத் தனிப்பயனாக்கு" என்பதில் கிளிக் செய்யவும்.

தற்போது நீங்கள் உள்ளீட்டு கருவியைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், ஏதேனும் உள்ளீட்டு பெட்டியில் இடஞ்சுட்டியை நகர்த்தவும் (சர்வபுலமும் ஆதரிக்கும்), மேலும் நீங்கள் தட்டச்சு செய்ய தொடங்கவும்.

தனிப்பட்ட உள்ளீட்டு கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான கட்டுரைகள்: