Google இயக்ககம்/ஆவணம்

Google இயக்ககம்/ஆவணத்தில் உள்ளீட்டு கருவியை எப்படி இயக்குவது என்பதைப் பற்றி விரைவாக அறிய கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

Google இயக்ககத்தில் உள்ளீட்டு கருவியை இயக்க மூன்று வழிகள் உள்ளன:

  1. பயனர் மொழி அமைப்பை நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் மொழிக்கு மாற்றவும். இதைச் செய்ய, இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  2. ஆவணத்தின் மொழி அமைப்பை நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் மொழிக்கு மாற்றவும். இதைச் செய்ய, புதிய ஆவணத்தை உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள ஆவணத்தைத் திறக்கவும். கோப்பு → மொழி என்பதைச் செல்லவும். பின்னர், நீங்கள் பயன்படுத்த விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. Gmail இல் உள்ளீட்டு கருவியை இயக்கவும்.

உள்ளீட்டு கருவியை இயக்கியவுடன், கருவிப்பட்டியின் வலதுபக்கத்தில் (அல்லது RTL பக்கத்தின் இடதுபக்கத்தில்) ஐகானைக் காண்பீர்கள்.

தனிப்பட்ட உள்ளீட்டு கருவிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பான கட்டுரைகள்:

தொடர்பான Google வலைப்பதிவு இடுகைகள்: