நீட் தேர்வுக்கு எதிராக திருவோடு ஏந்தி போராட்டம்..!

ஜி.சதாசிவம்
போராட்டம்

கடலூரில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதைக் கண்டித்தும்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் 100 பேர் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நீட் தேர்வு எழுதவுள்ள தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலத்தில் தேர்வு மையம் ஓதுக்கீடு செய்துள்ளதால் 17 வயதுள்ள மாணவ மாணவிகள் தனியாகத் தேர்வு எழுத அனுப்ப முடியாமல் பெற்றோர்களும் உடன் செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் செலவு அதிகரிக்கும். மேலும், ஏழை மாணவ மாணவிகள் பணம் இல்லாததால் வெளி மாநிலத் தேர்வு மையங்களுக்குச் செல்லமுடியாத நிலையில் தவித்து வருகின்றனர். இதனால் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்குத் தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்க வேண்டும். இல்லையெனில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் மத்திய அரசைக் கண்டித்து கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.