தேனியில் நியூட்ரினோ திட்டம் தொடங்கப்படும்..! - அணுசக்தி தலைவர் உறுதி

கார்த்திக் துரைமகாராஜன்.சி
அரசியல்

தேனியில், 'நியூட்ரினோ ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படும்' என்று இந்திய அணுசக்தி தலைவர் சேகர்பாசு தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் ஆட்சியின்போது, தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையடிவாரத்தில், நியூட்ரினோ ஆய்வுமையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, பூவுலகின் நண்பர்கள் சார்பில் 2015-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், நியூட்ரினோ திட்டத்துக்கு கடந்த மார்ச் மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்தது. இன்று, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணுசக்தி தலைவர் சேகர்பாசு, 'இரண்டாவது அணுசக்தி நீர் மூழ்கிக்கப்பல் இன்னும் ஓரிரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும். ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைப் பெற்று, நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தேனியில் செயல்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.