You are on page 1of 3

தாய் வாழ்க!

தாய் தந்த தமிழ் வாழ்க

அவையோருக்கு முத்தமிழ் வணக்கம்.

இன்று நான் ‘தமிழின் சிறப்பு’ எனும் தலைப்பில் தொண்மை தமிழின்


மாண்புகளையும் தனிச் சிறப்புகளையும் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

தொன்மை தமிழ், இலக்கிய வளமும் இலக்கண நுட்பமும் கொண்ட


மொழியாக திகழ்நது ் வருகிறது. தமிழின் தொண்மையை ஆராய்ந்து
கண்டறிந்த மொழி ஆராய்ச்சியாளர்கள் தமிழ்மொழி சுமார் 50 ஆயிரம்
ஆண்டுகள் பழமையுடையதாக அகழ்வாராய்ச்சியின் வழி
நிரூபித்துள்ளனர்.

முச்சங்கள் அமைத்து மொழி வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு


மட்டுமே உண்டு. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
என பகுத்து தமிழை வளர்தத ் ிருக்கிறார்கள். அகத்தியம் எனும் நூல்
முதற்சங்கத்தில் தோன்றிய முதல் நூலாக கருதப்படுகிறது.
தொல்காப்பியம் இடைச்சங்கத்தில் தோன்றிய நூலாக கருதப்படுகிறது.
திருக்குறள், குறுந்தொகை போன்ற நூல்கள் கடைச்சங்க நூல்களாக
கருதப்படுகின்றது.

சங்க இலக்கியங்கள் அகம், புறம் எனும் இருப்பிரிவுகளாக புலவர்களால்


பாடப்பட்டிருக்கின்றது. கலவு வாழ்ககை
் , கற்பு வாழ்ககை
் ஆகியவற்றை
அகப்பாடல்களில் நிரம்பியிருப்பதைக் காணலாம். மன்னர் ஆட்சி முறை,
வீரம், புலமை போன்றவை புறப்பாடல்களில் வெளிப்படுவதை உணரலாம்.
இத்தகைய பிரிவுகளைக் கொண்டு வாழ்ககை ் க்கு வேண்டிய
நற்சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் தமிழர்கள் சங்க
இலக்கியம் தொடங்கி இன்று பல பரிணாமங்களை கடந்து, காலத்தை
வென்று நிற்கிறது என்றால் இம்மொழியின் சிறப்பை என்னவென்று
கூறுவது? எனவே, தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கும்
ஒவ்வொருவரும் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றால் அது
மிகையாகாது.

அவையோர்களே!

தமிழ்மொழியின் மற்றொரு சிறப்பு பற்றி உங்களுடன் பகிர்ந்து


கொள்வதில் அடியேன் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இலக்கணம்
தொண்மை தமிழுக்கு அரனாக இருந்து இம்மொழியின்
கட்டுக்கோப்பை சிதைக்காமல் கட்டிகாத்து வருவது குறிபிடத்தக்கது.

எழுத்து, சொல், தொடர் போன்ற சீர்மையான முறையில் இலக்கண


பகுப்புகள் செய்து கொடுத்த தமிழ் இலக்கண நூல் தனிச் சிறப்பாக
கருதப்படுகிறது. அன்று, இன்று, என்றும் மாறாத தன்மையுடையதாக
இலக்கண கோட்பாடுகள் விளங்கி வருவது மொழியின் தெளிவை
நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

பிற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழி கற்பதற்கு எளிமையானதாக


கருதப்படுகிறது. எழுதுவதைப் போன்றே உச்சரிக்கும் தன்மை
தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. ஒருவர் தமிழ் மொழியை
விரைவாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள தமிழ் பெரும்
துணையாக இருக்கும் என்று கூறினால் யாராலும் மறுக்க இயலாது.
இதற்கு எளிமையும் தன்மையும் உலகத்தில் எம்மொழிக்கும் இல்லை
என்று துணிந்தே கூறலாம்.

சபையோர்களே!

இலக்கியமும் இலக்கணமும் கொண்டு காலத்தை வென்று பல்வேறு


நூற்றாண்டுகள் கடந்து இன்றும் இனிமை குறையாமல் கற்போர்
நெஞ்சத்தை நெகிழச் செய்யும் அருந்தமிழ் சிறப்பினை வார்ததை
் களால்
சொல்ல இயலாது. இதனையே, கவிஞர் நாமக்கள் இராமலிங்கம்
அவர்கள்,
‘தமிழன் என்றொரு இனமுண்டு

அவனுக்குத் தனியொரு குணமுண்டு

அமிழ்தம் அவந்தம் மொழியாகும்

அன்பே அவனது வழியாகும்’

என தமிழின், தமிழரின் மாண்புகளை நெகிழ்ந்து பாடியுள்ளார்.


இவ்வாறு தமிழின் சிறப்பைப் போற்றி பாடியவர்கள் எண்ணிக்கை
எண்ணில் அடங்கா. பழமையும் இனிமையும் கொண்டிருக்கும் தமிழை
நாளும் கற்றும், பிறருக்குக் கற்பித்தும் போற்றும் இனமாக திகழ்வோம்
என்று கூறி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

நன்றி, வணக்கம்

You might also like