You are on page 1of 2

தமிழ்மொழியின் சிறப்பு

பெரும்மதிப்பிற்குறிய அவை தலைவர் அவர்களே,நீதி வழுவா நீதி


மான்களே,அவைவோரே,மாணவர்களே உங்கள் அனைவருக்கும் எனது முத்தான முத்தமிழ்
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று நான் உங்கள் முன் தமிழ்மொழியின்
சிறப்பு என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

நம் தாய்மொழி தமிழ். அதை உயர்தனிச் செம்மொழி எனலாம். தனித்து இயங்கும்


மொழி. செம்மையான மொழி என எளிதாக இதன் பொருளை அறியலாம். தமிழ் என்றால்
அழகு. தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால் இளமை. தேன் தமிழ், தீந்தமிழ் முதலான
சொற்களின் பொருளால் இதை உணரலாம்.

தமிழ் என்பதை தம் + இழ் எனப் பிரித்தால் தம்மிடத்தில் ’ழ்’ ழைக் கொண்ட மொழி என
பொருள்படும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம்,
இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லில் “த” வல்லினத்தைச் சார்ந்தது. “மி”
மெல்லினத்தைச் சார்ந்தது. “ழ்” இடையினத்தைச் சார்ந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000


ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000
ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.ஜி.யு. போப்பும்,
கான்ஸ்டாண்டைன் ஜோசப் பெஸ்கியும் (வீரமாமுனிவர்) தமிழுக்குத் தொண்டாற்றிய
மேனாட்டவர்கள். வீரமாமுனிவர் தமிழில் 5 எழுத்துக்களை சீரமைத்துள்ளார். இலக்கண நூல்
(சதுரகராதி) ஒன்றையும், பிற இலக்கண, இலக்கியப் படைப்புகளையும் தந்துள்ளார்
(தேம்பாவணி, பரமார்த்தகுரு கதைகள்….) ஜி.யு.போப் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட
தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவரின் கல்லறை வாசகம்
அனைவரும் அறிந்திருப்பீர்கள் என அறிகிறேன். (”இங்கு ஒரு தமிழ் மாணவன்
உறங்குகிறான்.”)

தமிழ்த் தாத்தா உ.வே.சா, பரிதிமாற்கலைஞர், முனைவர். கால்டுவெல்


மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான அறிஞர்களின் அபாரமான
ஈடுபாட்டின் காரணமாகவே இன்று நம் மொழி தொடர்ந்து உயிர்பெற்று இயங்குவதையும்
எக்காலத்திலும் மறக்கக் கூடாது. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும்
மொழிகளுள் நம் மொழியும் இருக்கிறது. தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை
மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு என
கொண்டாடுகிறோம்.

தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும்


அன்புமொழி. உலகில் வேறு  எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு பக்திப்பாசுரங்கள்
நிரம்பிய மொழி தமிழ் ஒன்றே. தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை,
திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், இத்தகைய
தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை. தமிழ்மொழியிலே நிறைவாக
உள்ளன என்பதையே தமிழின் தனிச்சிறப்பு எனக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றோம்.

ஆகவே, தாய்த்தமிழின் மாண்புகளை உணர்ந்து எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம்


இனிய தமிழ்ச்சொற்களைப் பேசியும், எழுதியும் நம் மொழியின் இனிமையை
வெளிபடுத்துவோம். நம் தாய்மொழியின் சிறப்பை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுவோம்.

நன்றி வணக்கம்.

You might also like