You are on page 1of 3

TEKS UCAPAN AWAM

SMK BAHAU

KARNIVAL BAHASA TAMIL SEKOLAH MENENGAH KUALA PILAH JEMPOL JELEBU


TAHUN 2019

TARIKH: 17/4/2019
MASA: 7.30AM-2.00PM
TEMPAT: SMK LUI BARAT

தமிழின் சிறப்பு

‘எமை ஈன்றெடுத்த தாய் வாழ்க


தாய் தந்த தமிழ் வாழ்க’

அவைத்தலைவருக்கு நன்றி. தமிழ்க்கூறும் இச்சபைதனிலே நீதி வழி நிமிர்ந்து


நிற்கும் நீதிமான்களுக்கும் அன்புசால் மணிக்காப்பாளர் அவர்களுக்கும் மற்றும்
அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள் ஆயிரம்
சமர்ப்பிக்கின்றேன்.

‘தமிழின் சிறப்பு’ இதுதான் என் தலைப்பு.

அன்புசால் அவையோரே,

உலகில் பல்லாயிரம் மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஆயிரம்


மொழிகளே வரிவடிவமும் ஒலிவடிவமும் கொண்டவை. அவற்றுள் பழம் பெருமை
கொண்ட மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம் போன்றவை
விளங்குகின்றன. இவற்றுள் தற்போது தமிழும் இணைக்கப்பட்டு செம்மொழி
அங்கீகாரம் வகிக்கின்றது. காலம் தாழ்த்திக் கிடைத்த அங்கீகாரம் என்றாலும் இது
தமிழன்னைக்குச் சூடப்பட்டப் பொன்னாரம் என்றே கூறலாம். நதி மூலம் ரிஷி
மூலம் ஆராய முடியுமா? அப்படியே முடிந்தாலும் அவற்றின் சிறப்பைத்தான்
சொல்லித் தீர்க்க முடியுமா? அப்படித்தான் தமிழ்மொழியின் சிறப்பும். சொல்லித்
தீராத ஒன்று.

அவையோரே,

முதலாவதாக, தமிழ்மொழி தனித்தன்மை வாய்ந்தது. பல்வேறு திணை


நிலங்களிலும், திராவிட குடும்ப மொழி கிளைத்திட வைத்த தமிழ் தாயாக விளங்கி
தனக்கென ஒரு மொழிக்குடும்பத்தை உருவாக்கித் தன்னைச் சுற்றி வேர்களாகவும்,
விழுதாகவும் மொழிகள் கிளைப்பினும் தன்னிலை மாறாத உன்னத நிலையுடன்
இன்றளவும் நிலைப்பெற்று வருவது இதன் தனித்தன்மை ஆகும்.

அவையோரே,

உலகத் தமிழ் செம்மொழி மானாட்டு ஆய்வரங்கில் அமெரிக்க பேராசிரியர்


ஜார்ஜ் ஹார்ட் பேசியதாவது தமிழ் மொழியின் தனித்தன்மைக்கு வேராக
விளங்குவது சங்க இலக்கியங்கள் தாம். தமிழ்மொழி என்றும் வாழும் மொழி, அது
மனிதனின் எதார்த்தமான வாழ்க்கை முறையை குறிப்பிடுகின்றது. போர்களால்
ஏற்படும் கொடுமை, காதல், கற்பு இது போன்ற வாழ்க்கை முறையைச் சுட்டிக்
காட்டுகின்றன என்று கூறுகின்றனர்.

யாயும் யாயும் யாராகியரோ?


எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்?
செம்புலப் பெயல்நீர் போல்
அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே,

என்ற குறுந்தொகைப் பாடலின் அகவாழ்க்கைச் சிந்தனையை நாம் இன்றளவும்


சிந்திக்காத நாள் உண்டோ?

அவையோரே,

உலகில் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக்


கட்டமைப்புக் கொண்டது தமிழ்மொழி. இதன் இலக்கணப் பொதுமைப்
பண்புநெறிகள் திராவிட மொழிக்குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இதர இயற்கை
மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.
எடுத்துக்காட்டாக, தமிழில் நேர்கூற்று வாக்கியத்தை எப்படி மாற்றி எழுதினாலும்
அதன் பொருளும் செய்தியும் துளிகூட மாறாது. சான்றாக, முருகன் இடும்பனைக்
கொன்றான் என்ற நேர்க்கூற்று வாக்கியத்தை இடும்பனை முருகன் கொன்றான்,
கொன்றான் முருகன் இடும்பனை, இடும்பனை கொன்றான் முருகன், முருகன்
கொன்றான் இடும்பனை என எப்படி மாற்றி எழுதினாலும் அதன் பொருள் ஒன்றே.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். வானலாவியச் சிறப்புக்கு இவ்வொரு
எடுத்துக்காட்டே போதும்.

அன்புசால் அவையோரே,

உலகமயம் எனப்படும் சிந்தனை 21-ஆம் நூற்றாண்டில்தான் எல்லோராலும்


கருத்துரைக்கப்பட்டும் கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது. இணையம் வழி
உலகளாவிய தொடர்பு, பன்னாட்டு ஒருமைச் சிந்தனை ஆகியவை நம்
எல்லோருக்கும் புதுமையானது ஒன்றே. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
இவ்வுலகமயத்தை விளக்கி புலவர் கனியன் பூங்குன்றனார்,

யாதும் ஊரே யாவரும் கேளீர்


தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்று புறநாணுற்றில் பாடியுள்ளார். இவ்வரிகள் ஐக்கிய நாட்டுச் சபையில்


பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு, பன்மொழிகளில்
மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை உலகத்தார் அறிவர். இஃது தமிழனின்
தமிழ்மொழியின் உலகளாவிய உயரியச் சிந்தனையின் வெளிப்பாடு என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி போல ஆகும். எல்லோரும் அவர் மண், அவர் வீடு,
அவர் நாடு எனச் சிந்தித்த வேளையில் உலகளாவிய உயரியச் சிந்தனையைக்
குறிக்கோளாகப் பாடவைத்த தமிழின் சிறப்பை என்னவென்று கூறுவது? ‘ஒன்றே
குலம், ஒருவனே தேவன்’ எனக் கூறியதும் தமிழ்மொழியில் தானே.

தமிழ் நெஞ்சங்களே,
இத்தகையச் சிறப்பு வாய்ந்த தமிழை நேசித்தும் சுவாசித்தும் வாழக்கூடிய நாம்
பாக்கியசாலிகள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ‘அமுதே, தமிழே, அழகிய
மொழியே, எனதுயிரே’ என பெருமையுடன் பாடி எனது உரையை நிறைவு
செய்கின்றேன். நன்றி, வணக்கம்.

You might also like