You are on page 1of 2

தமிழ் மொழியின் சிறப்பு

முன்னுரை:

நம் எண்ணங்களை பிறருக்கு தெரிவிக்கவும், பிறருடைய உணர்வுகளை நாம்


புரிந்து கொள்ளவும் உதவுவது மொழியேயாகும். நாகரிகம் வளர வளர பேச்சி
வழக்கு மொழியெல்லாம் எழுத்து வடிவம் பெற்றன. காலத்தால் பழமையான,
ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழின்
சிறப்புகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பைந்தமிழ் சிறப்பு:

காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய


மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய்
வளர்ந்து. கன்னி தமிழாய், செந்தமிழாய், வண்டமிழாய் பைந்தமிழாய்,வலம் வரும்
ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற புலவர்களாலும், அரசர்களாலும்
சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும்.

செம்மொழியின் பண்புகள்:

செம்மொழியாய் தமிழ் சிறப்புற்று விளங்குவது தமிழர்கள் செய்த பெரும்


பேராகும். தமிழின் தொன்மை, பிறமொழி தக்கமின்மை, தாய்மை இலக்கிய வளமை,
இலக்கண செழுமை, நடுவுநிலமை, உயர்ந்த விழுமிய சிந்தனைகள், கலை
இலக்கியத்தன்மை, மொழிக்கோட்பாட்டுத் தன்மை செம்மொழிக்குரிய பண்புகள் என
மொழியளர் கூறுகின்றனர்.

தமிழ் இலக்கிய வளமை:

உலக இலக்கியங்காலில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள்


பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினொன்கிழ்கணக்கு நூல்கள் இன்றளவும்
தமிழ்மொழியின் இலக்கிய வளத்திற்கு இன்பம் சேர்கின்றன. தமிழ்மொழியில் உள்ள
இலக்கியங்களைப் போல வழமையான, செழுமையான இலக்கியங்கள் உலகிலுள்ள
வேறெந்த மொழியிலும் இல்லை எனசெண்ட்டு மொழியில் பேரறிஞர் கமில்சுவலபில்
கூறினார். ஒரு மொழியின் இலக்கியங்களை வைத்துத்தான் அம்மொழியில்
செழுமையை அறியமுடியும்.

இலக்கண வளம்:

ஒரு மொழியின் இலக்கண வளமே பற்பல இலக்கியங்கள் படைக்க


முன்னோடியாக திகழ்வதற்கு வழிவகுக்கும். தமிழ் மொழியின் தொன்மையான
இலக்கண நூல் தொல்காப்பியமாகும். எழுத்து, சொல், பொருள், ஆகிய
மூன்றுக்கும் தொல்காப்பியம் என இலக்கணம் கூறுகிறது. தொல்காப்பியரின்
ஆசிரியராணா அகத்தியரின் அகத்தியம் ஐந்திலக்கனங்களின் அருமையை
எடுத்துரைக்கிறது. நன்னுள் தண்டியலங்காரம் சதுரகாத்தி போன்ற இலக்கண
நூல்கள் தமிழ்மொழிக்கு அணிகலன்கலாய் அழகு சேர்கின்றன.

முடிவுரை:

தமிழ் தனித்தியநிக்கும் வலிமையுடையது காலத்தால் அழியாத கன்னி தமிழாய்


இளமையுடன் திகழக்கூடியது. பிறமொழி கழிப்பில்லாமல் வளர்ந்தோங்கும்
செழுமையுடைய மொழி தமிழ் மொழியாகும். இத்தகைய வளமை பொருந்திய
தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.

You might also like