பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 — - - தமிழின் சிறப்பு

இறுதியில் நான் ஐந்து ரூபாயும் கொடுத்து அனுப்பி வைத்தேன். என் மனைவி கேட்டாள்; "நான்தான் ஏமாந்து சேலையைக் கொடுத்து விட்டேன், நீங்கள் தெரிந்தும் அந்த மோசக்காரிக்குப் பணம் ஏன் கொடுத்தீர்கள்?' என்றாள் "நான் வழங்கியது அவளது நடிப்பிற்குப் பரிசு' என்றேன். "அவள் நடிக்கிறாள் என்பதை முதலில் நீங்கள் எப்படிக் கண்டீர்கள்? என்றாள் என் மனைவி. 'மூன்று மாதங்களுக்கு முன் தஞ்சாவூருக்குத் தண்டலுக்குப் போன பொழுது இரயிலடியில் ஒரே கூட்டமாக இருந்தது. இவளேதான், அங்கும் இப்படியே செய்தாள். நானும் ஓர் அணாப் போட்டுவிட்டுத்தான் போனேன். இப்பொழுது வந்த சந்தேகமெல்லாம், பதின்மூன்று மாதமாகியும் இன்னுமா குழந்தை பிறக்க வில்லை என்பதுதான்' என்றேன். எல்லோருக்கும் ஒரே சிரிப்பு -

பட்டப்பகல் 12 மணி; நாடக அரங்கில்லை ஒப்பனையில்லை; முகத்தில் பவுடர்கூட இல்லை. நான்கு புறங்களில் எந்தப் புறத்திலும் அடைப்பில்லை. அவள் இரண்டு கால்களையும் நீட்டிவிட்டு, வயிற்றைத் தடவி, உடம்பை நெளிந்தது, வாயில் உஸ் உஸ் உச் உச்சு கொட்டி, நெற்றியிலிருந்து கொட்டும் வியர்வையைத்தன் வலதுகையின் ஆள்காட்டிவிரலால்வழித்துச் சொட்டுச் சொட்டாக வடியவிட்டுக் காட்டிய நடிப்பு இன்னும் என் உள்ளத்தில் பதிந்திருந்தது. அது நடிப்பு அவள் நடிகை:

நல்ல கதை உயர்ந்த கருத்து: குறைந்த பாடல், சிறிய வசனம், அமைதியான நடிப்பு: விறுவிறுப்பான போக்கு; இவை அனைத்தும் அமைந்த நாடகேம வெற்றி நாடகமாக ஒளிவீசும். மற்றவை வெற்று நாடகமாகவே போய்விடும்.