பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 —C — சிறப்)

நாலாயிரப்பிரபந்தம், திருப்புகழ் முதலியவை குறிப்பிடத்தக்கன. இந்நூல்களின் உள்ள பக்திப் பாடல்கள் தமிழ்த்தேனொடு இசைத் தேனையும் கலந்து சுவை தருவனவாகும். -

தமிழிசை தோன்றிய காலம், தமிழ்மொழி தோன்றிய காலமே! தமிழ் மக்களின் எண்ணம், சொல், செயல், வாழ்வு அனைத்தும் இசைகலந்தவையாகவே காட்சியளிக்கின்றன, இவற்றுள் பிறந்த நாள் இசை, பாலூட்ட இசை, தாலாட்ட இசை, சோறுட்ட இசை (திருப்பள்ளி இசை), படுக்க இசை, இறங்க இசை, பள்ளியில் வைக்க இசை, நாற்று நட, களை பிடுங்க, கதிரறுக்க, தாளடிக்க, போரடிக்க வண்டியோட்ட, நெல்லுக்குத்த, சுண்ணம் இடிக்க, ஏற்றம் இறைக்க எல்லாவற்றிற்குமே இசை!

திருமணத்தில் நலங்கு இசை வளைகாப்பில் இசை வாழ்த்த இசை எல்லாம் இசைமயமே யாம். சுருக்கமாகக் கூறவேண்டு மானால், தமிழகத்தில் கல்லும் இசைக்கேட்டு நகருகிறது . (ஏலக்கத்தா), கப்பலும் இசைகேட்டு ஓடுகிறது. (ஐலசா); பாம்பும் இசைக் கேட்டு ஆடுகிறது. (மகுடி); பசுவும் இசை கேட்டுக் கறக்கிறது (கறவைப் பாட்டு); தமிழகத்தில் செத்த பிணமுங்கூட ஒப்பாரி இசை கேட்டுத்தான் சுடுகாட்டுக்குப் போகிறது என்றும்

கூறலாம். . . " - - -

இசை என்பது வாயினால் பாடுவது மட்டுமல்ல; கருவியினால் இசைப்பதும் இசையேயாகும். அவை தோல் கருவி, துளைக்கருவி.நரம்புக்கருவி என மூவகைப்படும். இவற்றைவிழா நாட்களில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் இசைத்து முழக்குவது மட்டுமல்ல, பிற நாட்களிலும் இசைத்து முழக்குவது உண்டு. மணப்பறை, பிணப்பறை, போர்ப்பறை, விழாப்பறை என்ற ச்ொற்கள் இவற்றை மெய்ப்பிக்கின்றன. - - - - -