பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( கலைச் சிறப்பு - Dー 67 -

சேர்ந்து இதை எப்படி ஆய்ந்து கண்டு அமைத்தனர் என்பதை, இன்னும் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

கற்றுாண்கள் இசைபாடும் கலைக்காட்சியை மதுரை, திருநெல்வேலி, சுசீந்திரம், ஆழ்வார் திரு நகரி முதலிய திருக்கோயில்களில் இன்றும் கண்டு மகிழலாம். இவற்றுள் நெல்லைக்கோயில் தூண்கள் மிகச் சிறந்தவை.

ஓவியக் கலை

தமிழ் மக்களின் ஓவியக்கலையும் உலகில் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஓவியக்கலையிலும் காவியக் கலையைக் காணலாம். காவியத்தில் ஒவியத்தையும் ஓவியத்தில் காவியத்தையும் காண்பதே தமிழ் மக்களின் காவியக் கலையுமாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் முன்னே தமிழ் மக்கள் ஓவியக்கலையில் சிறந்து விளங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு காலத்து ஓவியங்கள் ஒவ்வொரு சிறப்பை உடையவை. இன்றுநம் முன்னே பல்லவர் காலத்து ஓவியங்களும், சோழர் காலத்து ஒவியங்களும் காணக் கிடைக்கின்றன. இவற்றுள் சிலவற்றைத் திருச்சிக்குத் தெற்கே புதுக்கோட்டையை அடுத்து 10 மைல் தொலைவிலுள்ள சிற்றன்னை வாயிலிலும், தஞ்சைப் பெருவுடையார் கோயிலிலும் காணலாம். இவ்வோவியங்கள் எழுதப் பெற்று 1300 ஆண்டுகளுக்கு மேலாகியும் வண்ணம் அழியவில்லை. ஒவியத்தில் காணப்படும் நடனமங்கை, அரச அரசியரின் உருவங்களும், அல்லித் தாமரை பூத்த குளத்தின் உருவங்களும், நம் உள்ளத்தைக் கொள்ள கொள்வனவாக அமைந்திருக்கின்றன.