பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. தமிழின் சிறப் 64 —C ழின் சிறப்)

இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் உள்ள மணற் பரப்பில் 20 அடி ஆழம் எப்படி வெட்ட முடிந்தது? மூன்று அடியிலேயே தண்ணி இருக்கும்பொழுது அதற்கும்.கீழ் எப்படித் தோண்ட முடிந்தது? அக்காலத்தில் எந்த இயந்திரம் தண்ணிரை இறைத்தது? எந்த இயந்திரம் மணலைக் கொண்டு வந்தது? அல்லது மக்கள்தான் மணலையும் தண்ணீரையும் 20 அடி ஆழத்திலிருந்து எப்படிக் கொண்டு வந்தார்கள்? இவ்வளவு நீளமுள்ள கல் தூண்களை எந்த இயந்திரம் தூக்கி நிறுத்தியது. அல்லது மக்கள்தாம் எப்படித்துக்கி நிறுத்தின்ர்கள்?

- ぶ。 ஒரு தூணைப் படுக்கவைத்து 20 அடி நீளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து, பெரிய வடக்கயிற்றைத் தூணில் கட்டி, பல்லாயிரம் பேர் தூக்கி நிறுத்தி இருக்கலாம் என்று ஒரு என்ஜினியர் சொன்னார். அதன்படி ஒன்றைப் பறித்து நிறுத்தலாம். அதன் பக்கத்திலும் அவ்வாறே மற்றொன்றும் பறித்து நிறுத்தலாம். ஆனால் இவற்றின் எதிர்ப்பக்கத்தில் இரண்டு தூண்களை எப்படி நிறுத்தமுடியும்? என்று வினவியதற்கு, அதை யோசிக்க வேண்டியதுதான் என்று கூறிப் போய்விட்டார்.

திருவரங்கம் ஒரு தீவு என்பதை மேலே கண்டோம். இத்தீவுக்குள் மலைகள் எதுவுமில்லை. இருந்த அறிகுறியுமில்லை. இதற்குள் இவ்வளவுபெரிய தூண்கள் எப்படி உண்டாயின? வெளியிலிருந்தே வந்திருக்கவேண்டும். அக்காலத்தில் ஆறுகளுக்குப் பாலம் கிடையாது. இத்தீவுக்குள் எப்படி இவைகள் வந்தன? தெப்பத்திலும் இவைகளை ஏற்ற முடியாது. மணலிலும் இவைகளை உருட்டிக் கொண்டு வரமுடியாது. இது முடிந்த முடிவு. பின் எப்ப்டிவந்தன?