பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடையில் நாற்பது வரிகளில் வரும் சொற்கள், கவிதைகளில் நான்கு வரிகளில் அடங்கிவிடும். உரைநடையில் நூறு சொற்களை ஓலையில் எழுதி வைப்பதைவிட, அவற்றைப் பத்துச் சொற்களில் கவிதையாக்கி ஒலையில் எழுதி வைப்பது நல்லதெனக் கண்டனர். அதில் ஒலையும் குறைவு; வேலையும் குறைவு. மேலும் மனப்பாடம் செய்ய உரைநடையைவிடக்

கவிதை எளிது.

பழந்தமிழ் மக்கள் வீரத்தை-காதலை-கொடையைப் பொன்னேபோல் போற்றினர். ஒழுக்கத்தைப்-புண்பாட்டை உயிரேபோல் போற்றினர்.

இவைபற்றி அவர்கள் ஆராய்ந்து கண்ட உயர்ந்த கருத்துச் செல்வங்களைத் தமக்கு பின்வரும் தலைமுறையினர்க்கு வழங்க எண்ணினர். அதற்காக அவர்கள் கண்டுபிடித்து அமைந்த சிறந்த பாதுகாப்புக் கருவூலங்களே கவிதைகள்.

பூக்களைக் கட்டுவதற்கு நார் அமைதல் போலச் சொற்களைக் கட்டுவதற்குச் சந்தி அமைகிறது. சந்தி என்பது ஒரு சொல்லோடு மற்றொரு சொல்லை ஒட்டுகின்ற பசையாகும். அங்கு-இருக்கும் என்பவற்றை அங்கிருக்கும் என ஒன்றாக்கும்; சங்கு-ஊதும் என்பவற்றைச் சங்கூதும் என ஒன்றாக்கும்; பங்கு-ஆளி என்பவற்றைப் பங்காளி என ஒன்றாக்கும். இச் சந்தியினால் கவிதைக்கு இரண்டுவித நன்மைகள் ஏற்படுகின்றன. ஒன்று, முதல் சொல்லின் இறுதி எழுத்தையும், வரும் சொல்லின் முதல் எழுத்தையும் சேர்த்து ஒரு சொல்லாக ஒட்டுவது.மற்றொன்று, இச் சொற்களின் பொருள் கெடாமலும் ஓசை கெடாமலும் அவற்றிலுள்ள ஒவ்வொர் எழுத்தைக் குறைத்துவிடுவது