பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 —{ தமிழின் சிறப்பு)

மாத்திரை. இரு விரல்களையும் தூக்குவது அரை மாத்திரை. சேர்த்து அழுத்துவது முக்கால் மாத்திரை. நொடிப்பது முழு மாத்திரை என்றாகும். இதற்குரிய இலக்கண நூற்பா, "எண்ணல் கால், எடுத்தல் அரை, முறுக்கால் முக்கால்அ விடுத்தல் ஒன்று' என்பதே இதுபோன்று தமிழ் மொழிக்கு ஒலி இலக்கணம் அமைந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாயிற்று.

12. அலறினான், அழுதான், அறைந்தான், இளித்தான், இசைத்தான், இயம்பினான், உறுமினான், உளறினான், ஊளையிட்டான், கத்தினான், கனைத்தான், கிளறினான், கீச்சிட்டான், கூறினான், கூவினான், சாற்றினான், சிரித்தான், சீறினான், செப்பினான், படித்தான், பழித்தான், பிதற்றினான், பேசினான், புலம்பினான், விளக்கினான், விளம்பினான், வைதான், வாழ்த்தினான் என்ற சொற்கள் அனைத்துமே 'சொன்னான்' என்ற ஒரே பொருளில் வருவன. எனினும் அவை தமிழின் ஒலியையும், ஒலியின் தரத்தையும், ஒலிப்பவனது உதட்டையும் முகத்தையும் மட்டுமல்ல. அவனது உள்ளத்தையும் கூடக் காட்டுவனவாகும். - இவை அனைத்திற்கும் 'சப்தித்தான் அல்லது கர்ஜித்தான் என்ற வடமொழிச் சொற்கள் பொருந்துமா? என்று பாருங்கள். இவற்றிற்கு ஆங்கிலத்தில் சொற்களுண்டோ? எனத் தேடுங்கள். இவ் ஒலிகளை ஒலிக்க, குறிக்க, இந்தியில் சொற்கள் இருக்குமா? என எண்ணிப் பாருங்கள். இவை போன்ற பலவற்றாலும் தமிழ் எழுத்தின் ஒலியையும், தமிழ் மொழியின் ஒலியையும், தமிழ் ஒலியின் தனிச் சிறப்பையும் ஒருவாறு காணலாம். இது தமிழின் ஒலிச் சிறப்பு ஆகும்.