பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ിജ്ഞി சிறப்பு ノー 27

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை. ஏனெனில், அது ஒரு காலங்கடந்த மொழி. அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும், காவியமும், ஓவியமும், காவிரியும், வையையும், கட்டடமும், சிற்பமும், கல்வெட்டும், புதைபொருள்களும் ஒருவாறு அதன் தொன்மையைக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளரிற் சிலர், 'தமிழ் மொழியே உலகின் முதல்மொழி எனக் கூறுவர். இன்னுஞ் சிலர்'இலத்தீன், கிரீக் மொழிகளுக்கு முந்திய மொழி" எனக் கூறுவர். வேறு சிலர், 'இலத்தீன், கிரேக்க சீன மொழிகளோடு ஒத்த மொழி எனக் கூறுவர். இம் மூன்றில் எது உண்மையாகயிருப்பினும், இது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.

முற்காலத்திய சீன யாத்திரிகர், திரு.யுவாங் சுவாங், பாகியான் முதல், பிற்காலத்திய ஜி.யு. போப், கால்டுவெல், வின்ஸ்லோ, டேய்லர் வரையுள்ள வேற்று நாட்டினர். வேற்று நிறத்தினர், வேற்று மதத்தினர், வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்பெற்ற ஒரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை.

'தொன்னூல் விளக்கம்' என்னும் ஓர் அருமையான நூல் இன்னும் தமிழகத்தில் இருந்துவருகிறது. இதை எழுதியவர் இற்றைக்கு 260 ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலி நாட்டி லிருந்து இங்கு வந்த "பெஸ்கி பாதிரியார் என்கிற திரு. வீரமா முனிவர். இந் நூலைப் படிப்பதன் மூலம் மிகத் தொன்மையான பழந்தமிழ் நூல்களின் தன்மையை ஒருவாறு அறியலாம்.