பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ശ്രിതഗ് சிறப்பு 一つ一 23

தம்பி, சென்ற வாரம் கடற்கரைக்கு வரவில்லை?" என்று ஒருவன் மற்றொருவனைக் கேட்டான். ஆனால், அவன் கேட்டது, 'ஏன் பிரதர் லாஸ்ட் வீக் பீச்சுக்கு வரவில்லை?” என்றுதான் அதற்கு மற்றவன் 'வரலாமென்றுதான் புறப்பேட்டேன். தாயாரும் வருவதாகப் புறப்பட்டார்கள். அதனால் நின்றுவிட்டேன்" எனக் கூறினான். ஆனால், அதை 'வரலாமென்றுதான் ஸ்டார்ட் பண்ணினேன். மதரும் பாலோ பண்ணினாள். பீமல்ஸ்களை அழைத்து வர்ரது நான்சென்ஸ் என்று ஸ்டாப் பண்ணிட்டேன் பிரதர் என்றே கூறினான். இதுவா தமிழ்? இது ஆங்கிலம் தமிழோடு கட்டிப் புரண்ட கதை:

"அரெ அத்தா மாடமே. மூணுகாசு ரத்தாய் நீ எடுத்துக்கிட்டு பகட்கோ துகான்கு ஜாகோ, எக்காஸ்கு உப்புபீ. எக்காஸ்கு பளிபீ. எக்காஸ்கு மிளகுபி. வாங்கிக் கிட்டு பகடுகோ ஜல்தி ஓடிவா!' என்று சிலர் பேசுகிறார்கள். இது இந்துஸ்தானியும் தமிழும் கட்டிப் புரண்ட கதை!

தமிழுக்கு உள்ள தனித்தன்மைபோல வடமொழிக்கும் ஒரு தனித்தன்மையுண்டு 'ஓம் கதலி பலம் சம்ர்ப்பியாமி! தாம்பூலம் சமர்ப்பியாமி! நாரிகேளம் சமர்ப்பியாமி கந்தம் சமர்ப்பியாமி' என அர்ச்சிக்கும் பொழுது, அம் மொழியின் தனித்தன்மையில் ஓர் அழகும் அதன் ஒசையில் ஓர் இனிமையும் காணப்படுகிறது. அதை விட்டு, "ஓம் பிளாண்டைன் புருட்சமர்ப்பியாமி! பெட்டல் அண்ட் நட சமர்ப்பியாமி! கோகனட் சமர்ப்பியாமி சான்டல் சமர்ப்பியாமி' எனக் கூறினால் ஆங்கிலத்திற்குத்தான் என்ன பெருமை? என்பதைச் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும்.