பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இலக்கியச் சிறப்பு - D— 121

♥a பாளையாந் தன்மை செத்தும் பாலனாம் தன்மைசெத்தும் காளையாம் : ருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும் மாளும் இவ்வுடலின் முன்னே மேல்வரும் முப்புமாகி

நாளும் நாள் சாகின்றோமால் நமக்குநாம் அழாத தென்னே

ஒரு துறைக் கோவை

அகம், புறம் என்ற இலக்கணத்தைப் போன்று இலக்கியங்களும் பிரிக்கப் பெற்றுள்ளது அகத்துறையில் தோன்றியுள்ள இலக்கியங்கள் எண்ணில் அடங்காதவை. அதில் ஒரு பகுதி கோவை என்பது. இது 400 துறைகளைக் கொண்டது. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பாடலாக 400 துறைக்கும் 400 பாடல்களைக் கொண்டது. அத் துறைகள் காட்சி, ஐயம் குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், நலம்புனைந்துரைத்தல், காதற் சிறப்புரைத்தல், நானுத்துறவுரைத்தல், அலரறிவுறுத்தல், பிரிவாற்றாமை, படர்மெலிந்திரங்கல், நினைந்தவர் புலம்பல் முதலியன. அவற்றில் ஒரு துறை, தலைவி விரும்பிய காதலன் தன் எதிரே வந்து நிற்கக்கண்டதும் வெட்கப்பட்டுக் கண்களை மூடிக்கொள்ளுதல். இத்துறை நாணிக் கண்களை மூடிக்கொள்ளுதல். இத் துறை "நாணிக் கண்புதைத்தல்" என்றாகும். இந்த ஒரு துறையை மட்டும் வைத்தே 400 பாடல்கள் கொண்ட இலக்கியமும் ஒன்று உண்டு.

'அஞ்சாங் குலத்தவர் பார்ப்பாரைச் சேர்ந்தது அதிசயமே” என்பது அகத்துறையில், கோவையில் 400 துறைகளிலுள்ள ஒரு துறையில், அகத்துறையிலுள்ள 400 பாடல்களிலுள்ள ஒரு பாடலில், ஒரு அடி இந்த ஒரு அடியும் மூன்று பொருள்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. - - -