பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 18 —C . தமிழின் ಸ್ರ್)

நோக்குமின் என்றே தொடங்கியிருக்கிறார் இது தமிழகப் புலவர் பெருமக்களின் பரந்து விரிந்த மனப்பான்மையைக் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

ஒழுக்கம்

பிறநாட்டு நூல் நிலையங்களுக்குச் சென்று, 'வரலாற்றுக்குப் புறம்பாக, விஞ்ஞானத்திற்கும் புறம்பாக, மருத்துவத்திற்குப் புறம்பாக, மதத்திற்குப் புறம்பாக, ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் கூறுகிற ஒருநூலை எடுங்கள் எனக்கேட்டால்"இல்லை என்ற விடையே வரும். தமிழ் மொழியில் ஒன்றென்ன பல ஆத்திசூடி கொன்றை வேந்தன். நன்னெறி, நல்வழி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, திரிகடுகம், நான்மணிக் கடிகை, நாலடியார், திருக்குறள் போன்று ஒழுககத்தைப் பற்றி மட்டும் கூறுகிற நூல்கள் பல உள்ளன. இது

தமிழ் இலக்கியங்களின் மற்றொரு சிறப்பு ஆகும்.

சமயம்

உலகின் எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் இல்லாத அளவிற்குத் தமிழ் மொழியில் சமய இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. சைவ சமயம், வைணவ சமயம், சமண சமயம், புத்த சமயம் இஸ்லாம் சமயம், கிறிஸ்துவ சமயம் ஆகிய எல்லாச் சமயங்களுக்கும் தமிழ் மொழியில் அமைந்திருப்பது போன்ற சமய இலக்கியங்கள் எந்த மொழியிலும் அமைந்ததில்லை. இது தமிழ் இலக்கியங்களின் வேறொரு சிறப்பு

ஆகும். . . . . . . .