பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(F-ಕೆಕಿ சிறப்பு —T 99

திரையருகில் நின்று இருவர் இரகசியம் பேசுகிற காட்சி வரும். அவர்களுக்குப் பின்னால் 'இராஜ வீதி' திரையிடப் பெற்றிருக்கும். -

கொலைக்களத்திற்குப் போகிற கோவலன் சரளி வரிசை பாடுவான். "இராமாநீசமானம் எவரு என்ற பாடலை இராவணன் பாடிக்கொண்டிருப்பான்.

நல்லதங்காள் வேடம் போட்டிருப்பவளுக்கு வயது 20 இருக்கும். அவளருகில் நிற்கும் பிள்ளைகள் ஏழில் மூத்தவனுக்கு வயது 25 இருக்கும். - -

இராவணன் வேடம் போட்டிருப்பவன் எடை 80 பவுண்டும், சீதை வேடம் பூண்டவளின் எடை 160 பவுண்டும் இருக்கும். இருந்தால் நாடகம் எப்படி இருக்கும்?

இவை அனைத்தும் காணச்சகியாதவை; நாடகம் நடத்துவோர் எதில் கவனம் செலுத்தாவிடினும் வேடம் பூண்டவருக்கு வேண்டிய வயதிலும், உடல் அமைப்பிலும் கருத்தைச் செலுத்தியாக வேண்டும்.

எவ்வளவு குறைபாடுகளிருப்பினும், ஆதரவற்றிருப்பினும், இன்றைய இந்தியாவில் நாடகக்கலையில் தலை சிறந்து விளங்குவது தமிழகமே யாகும். இதை எண்ணி மகிழ்ச்சியடைய நமக்கு உரிமையுண்டு. நாடகக் கலைஞர்களைப் பாராட்டித் தீரவேண்டிய கடமையும் நமக்குண்டு.

இன்றுதான் தமிழகத்தில் நாடகக்கலை உச்ச நிலையில் இருக்கிறது என்பதல்ல. பழந்தமிழகத்தில் அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உச்ச நின்லயில் இருந்திருக்கிறது. உலகுக்கு நாடகக்கலையை வழங்கியதே