Você está na página 1de 4

தமிழ்மொழியின் தோற்றம், வளர்ச்சி, மொழிக் குடும்பங்கள், மொழியியல் வரையரை, வகைகள்

ஆகியவற்றை விளக்கி 350 சொற்களுக்குக் குறையாமல் கல்விசார்க் கட்டுரை ஒன்றினைப் படைத்திடுக.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி - யதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் – தொழுதேத்துங்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் – பாகரெனிற்

கடல்வரைப்பி னிதன் பெருமையாவரே – கணித்தறிவார்

என்று தமிழின் பெருமையைக் கம்ப இராமாயணம் பாராட்டியுள்ளது என்று கூறினால் மிகையாகாது.


தொன்மை, முன்மை, எளிமை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை மற்றும்
வியன்மைக்குரிய தமிழ்மொழியானது ஐந்திலக்கணம் கொண்ட மொழியானதாகவும் பல அறிஞர்களால்
இன்றுவரை மதிக்கத்தக்க மொழியாக வலம் வருகிறது என்று மார்த்தட்டிக் கூறலாம். தொன்மையும்
இனிமையும் கலந்த தமிழ்மொழியின் வரலாற்றை அறியாவிடில் தமிழர்களாகிய நமக்கு அவலம்
என்பதால், இத்தகையச் சிறப்புக்குரிய தமிழின் வரலாற்றை அறிவது நமது தலையாயக் கடமையாகும்.

நம் தமிழ்மொழியானது பதின்மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தில்


தோற்றுவிக்கப்பட்டது. குமரிக் கண்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழானது முதல் சங்கமாகக்
கருதப்படுகிறது. அச்சங்கத்தில் நூற்றுக்கணக்கான புலவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றி, ஏறக்குறைய
4400 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் சங்கமானது பாண்டிய மன்னர்களால் கண்ணும் கருத்துமாகப்
பேணி காக்கப்பட்டு வந்தது. இறுதியில், இம்முதற் சங்கமானது ஆழிப் பேரலையால் அழிவுற்றது என்று
வரலாறு கூறுகிறது. தொடர்ந்து, தமிழ்மொழியின் சிறப்பானது முதற்சங்கத்தோடு நின்று விடாமல்
இடைச்சங்கத்திலும் வெண்டேர்ச்செழியன் என்ற பாண்டிய மன்னனால் கபாடபுரத்தில்
தோற்றுவிக்கப்பட்டு 3700 ஆண்டுகள் காக்கப்பட்டு வந்தது. இடைச்சங்கமும் ஆழிப் பேரலையால்
அழிவுற்றப் பிறகு முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னனால் கடைச்சங்கம் தோற்றம் கண்டு 1800
ஆண்டுகள் இயங்கியது. ஆனால், இக்கடைச் சங்கமானது காலச்சூழ்நிலைக் காரணத்தால் மறைந்து
போனது. தமிழ்மொழியின் தோற்றமானது இம்மூன்று சங்கத்தின் மூலமாகவே அமைந்தது என்று
கூறுவதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

பழைமைக்குப் பழைமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்ப் புத்தொளி வீசிப் புதிய புதிய


பரினாமங்களைப் பெற்று வீறும் விறுவிறுப்பும் கொண்டு வாழ்கின்ற மொழியான தமிழ்மொழியின்
வளர்ச்சியானது மிகவும் அரிதானதாகும். ‘குமரிக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதியே மக்கள் வாழ்வதற்குத்
தக்க நிலையை அடைந்தது’ என்று குமரிக்கண்டப் பகுதியை அறிஞர் ஹெக்கல் கூறியது
மருக்கப்படாத வரலாறு ஆகும். குமரிக்கண்டத்தில் தோற்றம் கண்ட தமிழ்மொழியானது
தென்மதுரையில் மூன்று சங்கங்கள் நிறுவப்பட்டு மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது. தமிழ் மொழியின்
வளர்ச்சியானது அத்தோடு நின்று விடாமல் ஆரியர் வருகைக்குப் பின் நீதி நூல்களின் வழி
வளர்ச்சிக் கண்டது. பல்லவர் காலத்திலோ பெரிய புராணம் நாலாயிரத்திவ்யப்பிரபந்தம் போன்ற பக்தி
இலக்கியங்களின் வழி வளர்க்கப்பட்டதோடு செய்யுள் வடிவத்தில் இருந்த இலக்கியங்களைப் பல
உரையாசிரியர்கள் உரைநடைப்படுத்தி பாமர மக்களுக்குப் புரியும் வண்ணமாக மாற்றி அமைத்தனர்.
இதுவே தமிழ் மொழியின் சிறந்தொரு வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியின் வளர்ச்சியானது
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒரு பெரிய மாற்றத்தினைக் கண்டுள்ளது என்று தான் கூற
வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு போதனா முறை வகுப்பு, நாடகம், சிறுகதை போன்ற போட்டிகள்
நடத்தப்பட்டு தமிழ்மொழி வளர்ந்து வந்தது என்று கூறினால் மிகையாகாது. இன்று அதே தமிழ்
மொழியானது எத்தனையோ மாற்றங்களையும் வளர்ச்சியையும் கண்டு வாழ்ந்து வருவதைக் கண்டு
வருகிறோம். இன்று தமிழ் மொழியானது ஓர் இரட்டை வழக்கு மொழியாக உள்ளமை நாம்
நன்கறிந்தது. இந்நிலையில் பழைய இலக்கண நூல்களில் காணப்படும் சில இலக்கணக் கூறுகள் இடம்
பெறாமல் இருப்பதாக முனைவர் ச.அகத்தியலிங்கம் தமிழ்மொழி அமைப்பியல் என்ற நூலில்
குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஒரு தனி மனிதனுக்குத் தன் குடும்பமானது எவ்வளவு முக்கியமோ அதுபோல்


மொழிகளுக்கும் தன் குடும்பமானது மிகவும் முக்கியமானதாகும். உலக மொழிகள் மொத்தம் 13
மொழிக்குடும்பங்களாக பகுப்புச் செய்யப்பட்டுள்ளன. காட்டாக, இந்தோ ஐரோப்பியம், ஆப்பிரிக்க
ஆசிய, சீனோ திபேத்தியன், உராலிக் அல்டாயிக், திராவிடம், தென் கிழக்காசியம், மலேயா
பாலினேசியம், பாப்பான், ஆஸ்திரேலியம், அமெரிக்க இந்தியா, ஜப்பானியம், கொரியன் மற்றும் பாஸ்க்
என்ற மொழிக்குடும்பங்கள் ஆகும். நம் செம்மை மொழியான தமிழ்மொழியினையும் அதன் இன
மொழிகளையும் அறிஞர் கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லால் குறிப்பிட்டார். திராவிட மொழிக்
குடும்பமானது இந்தோ ஆரிய மொழிகளுக்கு அடுத்தப்படியான முக்கிய மொழிக் குடும்பமாகக்
கருதப்படுகிறது. ஆனால், இதனை மொழி ஞாயிறான தேவநேயப் பாவாணர் “பால் திரிந்து தயிரான
பின் மீண்டும் பால் ஆகாமைப் போல் தமிழ் திரிபான திராவிடம் மீண்டும் தமிழ் ஆகாது” என்று
தீர்மானமாகக் கூறிச் சென்றுள்ளார்.

எல்லாமுமான மொழி...

பிறப்பால் கொண்ட மொழி...


உறவுகளைச் சொன்ன மொழி..,

பேசிப் பழகின மொழி

இந்த நான்கு வரி கவிதையானது, மொழி ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும் மொழி
இல்லையேல் சமுதாயம் இல்லை என்பதனையும் உணர்த்துகிறது. அப்படிபட்ட மொழியினை ஆராயும்
ஒரு துறையே மொழியியல் ஆகும். மொழியினை ஆராய்ச்சி செய்யும் ஒருவர் மொழியியலாளர்
ஆகும். மொழியை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிவியலையும் கலையையும் இணைத்து
ஒரு அரிய பாலமாக விளங்குவது மொழியியலாகும். மொழியியலின் அமைப்புகளாக ஒலியியல்,
ஒலியனியல், உருபனியல் மற்றும் தொடரனியல் உள்ளன. மொழியியலைத் தூய மொழியியல், பயன்படு
மொழியியல் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தூய மொழியியல் என்பது மொழியியற்
கோட்பாடுகளை விளக்குவது ஆகும். பயன்படுமொழியியல் என்பதோ மொழியியலின்
கோட்பாடுகளைத் தனித்தனி நிலையிலும் உளவியல், மானிடவியல், சமுகவியல் முதலிய பல
துறைகளுடன் இணைத்துப் பயன்படுத்தும் நிலையில் விளக்குவது ஆகும்.

மொழியியல் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், மனிதனைக் குறித்த மொழியியல்


அதாவது மொழிக்கும் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பை ஆராய்வது ஆகும். உளவியல் பாங்கில்,
புரிதலில் உள்ள கோளாறுகள் முதலியவற்றை வரையறைச் செய்வது உளவியல்சார் மொழியியல்
ஆகும். நரம்பியல்சார் மொழியியலைப் பார்த்தோமானால், இது மொழியைப் பேசுதல், கேட்டல்,
எழுதுதல், படித்தல், முதலான மொழியியற் கூறுகளில் மூளை அல்லது நரம்பு மண்டலத்தின் பங்கினைப்
புலப்படுத்துகிறது. கணிதம் வழி மொழியியல் விதிகள், வரை படங்கள், ஒலிநீட்சி முதலியனவற்றை
வரையறைச் செய்வது கணிதவியல்சார் மொழியியல் ஆகும். ஐந்தாவதாக, வரலாற்று மொழியியல்
என்பது மொழியை வரலாற்று பார்வையில் பார்ப்பதே இதன் பொருளாகும். ஒப்பீட்டு மொழியியலின்
பொருள் என்னவென்றால் ஒரு மொழியை அதன் இன மொழியோடு ஒப்பீடு செய்து அதில் இருக்கும்
ஒற்றுமை கூறுகளை வரையறைச் செய்வது ஆகும். குறிப்பிட்ட ஒரே காலநிலையில் அதன்
மொழியமைப்பை ஆராய்வது விளக்க முறை மொழியியலாகவும், ஒரு மொழியை வேற்று மொழியோடு
ஒப்பிட்டு, வேற்றுமைக் கூறுகளைக் காண்பது முரண்பாட்டு மொழியியலாகவும் குறிப்பிடப்படுகிறது.

சுருங்க கூறின், பழமையும் பாரம்பரியமும் கொண்டு மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக


இடையறாமல் வாழ்ந்து, தனக்கெனத் தனி இலக்கணங்களையும் இலக்கியங்களையும் படைத்து
வாழ்வாங்கு வாழ்ந்து வரும் மொழியே தமிழ் மொழியாகும். இத்துணைச் சிறப்புகுரிய மொழியினை
நாம் நன்கு ஆழமாகப் படித்திருக்க வேண்டும். ஒரு மொழியானது மனித நாகரீகத்தோடும் சமுதாய
உணர்வுகளோடும் பின்னிப்பிணைந்து இயங்கி வருகிறது என்பதால் அதன் மொழியியல் அறிவு நமக்கு
அத்தியவாசியம். மொழியியலின் பற்றிய அறிவுத் தெளிவு இருந்தால், எதிர்காலத்தில் ஓர் ஆசிரியர் தன்
மாணவனுக்குத் தெளிவாகவும் சரியான உச்சரிப்பிலும் பாடம் கற்பிக்க முடியும். அம்மாணவனும்
தேர்விலோ அல்லது மொழியியல் துறையிலோ சிறந்து விளங்க முடியும். “இருந்தமிழே யுன்னால்
இருந்தேன் இமையோர் விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”, அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே
என்று வானோர் கூறியது போல் அததமிழ் மொழியினை நன்கு கற்று அறிந்திருக்க வேண்டும்.

Você também pode gostar