தமிழின் சிறப்பு - ஒரு சிந்துக் கவிதை

185 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Aug 16, 2023, 10:41:10 PM8/16/23
to santhavasantham
தமிழின் சிறப்பு - ஒரு சிந்துக் கவிதை

கவியின் சுவையைப் பெருக்கும் - தமிழ்
   கலந்தா ருயிரை உருக்கும் 
கவலை இருளைச் சிதைக்கும் - ஒரு
   கதிராய் உலகில் உதிக்கும்.   

சந்தத் தமிழில் தழைக்கும் - மிகு
   தாளத்(து) இசையின் முழக்கம்
சிந்தை முழுதும் இனிக்கும் - செழும்
   தேனாம் அமுதை நிறைக்கும்.

அறிவின் நுணுக்கம் விளக்கும் - தமிழ்
   அகிலத்(து) இயல்பை விரிக்கும் 
உறவும் உளமும் சிறக்கும் - அறம்
   உணர்த்தித் தெளிவை அளிக்கும்.

அணுவின் உருவைத் துளைக்கும் - குறள்
   அடியால் உலகை அளக்கும்
மணிபொற் சுடராய் ஒளிர்க்கும் - தமிழ்
   மலராய் மனத்தில் தளிர்க்கும்.

இமயவரம்பன்

GOPAL Vis

unread,
Aug 17, 2023, 12:41:41 AM8/17/23
to santhav...@googlegroups.com
சிந்துக் கவிதை இனிமை.
கவலை இருளைச் சிதைக்கும் - ஒரு     எப்படிப் பொருள் கொள்ள வேண்டும்?
   கதிராய் உலகில் உதிக்கும்.   

மணிப்பொற் சுடராய்?

கோபால்

On Thu, Aug 17, 2023 at 8:11 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
தமிழின் சிறப்பு - ஒரு சிந்துக் கவிதை

கவியின் சுவையைப் பெருக்கும் - தமிழ்
   கலந்தா ருயிரை உருக்கும் 
கவலை இருளைச் சிதைக்கும் - ஒரு
   கதிராய் உலகில் உதிக்கும்.   

. . . . .

Anand Ramanujam

unread,
Aug 17, 2023, 6:57:39 AM8/17/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. கோபால்!

கவலை இருளை நீக்க வரும் கதிர் என்று சொல்லும்போது,  உலகத்தாரின் மனத் கவலை என்னும் இருளை எல்லாம் தன் இனிமையாலும் இறைத்துதியாலும் மாற்ற வல்ல  ஒளிக்கதிராகத் தமிழ் விளங்குவதையே குறிப்பிடுகிறேன்.

மணிபொன் = ‘அணிபொன்’ என்று மாற்றுகிறேன்.

திருத்தப்பட்ட ஈற்றடி:

அணிபொற் சுடராய் ஒளிர்க்கும் - தமிழ்
   அலராய் அகத்தில் தளிர்க்கும்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtsRW0PoDfQ111jLKkcnucKv7b1cxZE_LDi6P0E%3DmsD4dA%40mail.gmail.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 17, 2023, 7:15:32 AM8/17/23
to santhav...@googlegroups.com
சிறப்பான பாடல்கள்

             -தில்லைவேந்தன்

.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Aug 17, 2023, 7:55:26 AM8/17/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்!

..

குருநாதன் ரமணி

unread,
Aug 17, 2023, 9:13:17 AM8/17/23
to சந்தவசந்தம்
தமிழ் மொழிச்சிறைப்பைப் பாடும் சிந்துப் பாக்கள் யாவும் அருமை.
ரமணி

Anand Ramanujam

unread,
Aug 17, 2023, 10:18:34 AM8/17/23
to santhavasantham
மிக்க நன்றி, திரு. ரமணி அவர்களே!

சில மாற்றங்களுடன்:



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Aug 20, 2023, 10:10:40 PM8/20/23
to santhav...@googlegroups.com
நல்ல சிந்துப் பாடல்

On Thu, Aug 17, 2023 at 9:18 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
மிக்க நன்றி, திரு. ரமணி அவர்களே!

Anand Ramanujam

unread,
Aug 20, 2023, 10:50:25 PM8/20/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இலந்தையாரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Aug 22, 2023, 12:58:51 PM8/22/23
to Santhavasantham
அருமை..அருமைக் கவிஞரே.

அன்பன்
மீ.விசுவநாதன்

Anand Ramanujam

unread,
Aug 22, 2023, 1:53:21 PM8/22/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. மீ.வி. அவர்களே!

Reply all
Reply to author
Forward
0 new messages